top of page

இனிய வணக்கங்கள்!

ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாம சௌந்தரி அம்பாள் திருக்கோயில், தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு நகரருகில் அமைந்துள்ளது. 

பிற்காலப் பாண்டியரால் கட்டப் பெற்று நாயக்க மன்னரால் விரிவாக்கப் பெற்றது.

 

மிதமான வஞ்சி ஒடைக் கரையில் அழகான வயல்வெளிகளுக்கு நடுவே கம்பீரமாக அமைந்துள்ள இக்கோயிலில் பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். குபேரன் இந்த ஸ்தல மூலவரான சிவனை வணங்கி விமோசனம் அடைந்ததால் அவரது சங்கநிதி & பத்மநிதி ஆகியோர் இங்கு அருளாசி செய்கின்றனர்.

 

மேலும் இங்கு பல்வேறு சமுதாய மக்களின் குல தேவதைகளும் வணங்கப்படுகின்றனர்.

திருக்கோயில் சிறப்புகள்

அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் ராசிச் சக்கரமும் கருவறையின் மேற்கூரையில் மீன் சின்னம் மற்றும் இறையிலி நில அளவும் குறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அதிகார நந்தி தமிழகத்திலேயே ஐந்தாவது மிகப்பெரிய நந்தி சிலையாகும். தமிழகத்தில் முப்பெருந் தெய்வங்களுடன் சங்கநிதி மற்றும் பத்மநிதி அருள்புரியும் ஒரே ஸ்தலம் இதுவாகும். நதிக்கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருந் தெய்வங்களும் அருள்புரியும் மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்து வரமருளும் ஸ்தலமாக அமைந்துள்ளது. குடமுழுக்கு விழாவின் பொழுது ஹோம குண்டத்தின் அக்னி வலம் சுழித்து எழுந்தது இத்திருக்கோயிலின் புனிதத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.

கோயில் முகவரி

ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாம சௌந்தரி திருக்கோயில்,

c/o. நடராஜன் செட்டியார் (தலைமை அர்ச்சகர்),

முத்துலாபுரம் (அஞ்சல்),

வத்தலக்குண்டு (வட்டம்),

திண்டுக்கல் மாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா 624202

சமூக வலைதளத்தில் பின்தொடர
  • Wix Facebook page
  • Twitter Classic
  • Wix Google+ page

பார்வையாளர்கள் எண்ணிக்கை

திருக்கோயில் சிறப்புகள்

மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் :-

***************************

ஸ்தல மூலவர்  : ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர்

ஸ்தல அம்பாள் : ஸ்ரீ சிவகாமி அம்பாள்

ஸ்தல உற்சவர் : ஸ்ரீ உமா சமேதரர்

ஸ்தலம்               : குபேர ஸ்தலம்

தீர்த்தம்                 : வஞ்சி ஓடை, பிரம்ம கூபம்

 

முதன்மை உற்சவங்கள் :-

*************************

1. மஹா சிவராத்திரி

2. பக்ஷ பிரதோஷம்

3. மார்கழி திருவாதிரை

4. ஆடிப் பெருக்கு

5. வைகாசிப் பொங்கல்

bottom of page